ETV Bharat / state

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச்.12 தொடக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச்.12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

election news
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல்
author img

By

Published : Mar 11, 2021, 4:02 PM IST

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, மார்ச் 12 முதல் 19-ஆம் தேதி வரை, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக வேட்புமனு விண்ணப்பம் பெறலாம், அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மணு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவருக்கு மட்டுமே அனுமதி என்றும், இரு வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற 22-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பேரணியாக செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பென்னாகரத்தில் 3ஆவது முறையாக களமிறங்கும் ஜி.கே.மணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.