சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தின் முதல் தளத்தில் செல்கைப் பகுதியில் உள்ள கழிவறை பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. கழிப்பறைக்குள் கதவுகள், தண்ணீர்க் குழாய்கள் என அனைத்தும் சேதமாகியும், அசுத்தமாகவும் உள்ளன.

விமான நிலையத்தின் பல பகுதிகளில் புதிய கட்டுமான பணிகள் நடந்துவருகின்றன. ஆனால் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட பொதுமக்கள் கழிவறை பராமரிப்பின்றி இருப்பது குறித்து விமான நிலைய ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.
விமான நிலையத்தில் கழிவறைக்குச் செல்லும் பயணிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் முகம்சுளிக்கும் நிலை தொடர் நிகழ்வாகியுள்ளது. விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தாறுமாறாக வந்து பெண்கள் மீது மோதிய வாகனம்: வெளியான சிசிடிவி