சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,' ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் பேசியதை, இந்த காலகட்டத்தில் தவிர்த்து இருக்கலாம் என்பது எங்களுடைய கருத்து என தெரிவித்தார்.
வருகின்ற காலங்களில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உட்பட எந்த தேர்தல் வந்தாலும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும். இப்போது மக்கள் முழுமையாக கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதைச் சந்தித்து வெற்றி பெற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது. அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்' என்றார்.
இதையும் படிங்க: குவைத்தில் சித்ரவதை, சென்னை திரும்பிய இளம்பெண் கண்ணீர்