சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்க அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவைச் சோ்ந்த சேகா் ஆண்டியப்பன் (44), சென்னையைச் சோ்ந்த உமாமகேஸ்வரி (37),லட்சுமிதேவி (42) ஆகியோர் இட்லி குக்கர், உள்ளாடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை சுங்க அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து ரூ 34 லட்சம் மதிப்புள்ள 970 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள் அவர்களை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.