சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.13) தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை கொண்டாட்டத்துக்காக ஒரு சிலர் பழைய டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் பொருள்களை எரிக்கின்றனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டு பல்வேறு உடல்நலக்குறைபாடுகள் ஏற்படுகின்றன.
இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்கின்றன. சாதாரண மரத்தாலான பொருள்கள், பேப்பர்கள், துணிகள் போன்றவற்றை மட்டுமே எரித்து இயற்கை பாதிப்பில்லாத போகி கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில் போகி கொண்டாட்டத்தால் காற்று மண்டலம் முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. அத்துடன்ம் அதிகாலை வேளையில் பனிமூட்டம் ஏற்பட்டதால் அதிகாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இதனால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையால் ஏற்படும் பனி மூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும். இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு விமான சேவையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ரஷ்யருக்கு 18 ஆண்டுகள் சிறை...!