இலங்கை, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திவருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் இலங்கை, துபாயில் இருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை தீவர சோதனை மேற்கொண்டனர்.
அதில் சென்னை, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, மும்பை, புதுக்கோட்டை, இலங்கை ஆகிய இடங்களை சேர்ந்த 24 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அலுவலர்கள் அவர்களை தனி இடத்திற்கு கொண்டு சென்று அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது இவர்கள் உள்ளாடை மற்றும் உடலுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூபாய் 2 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவர்களை கைது செய்தனர்.
இதில், மூன்று பெண் பயணிகள் சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலுக்கு கடத்தல் குருவிகளாக இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களை கடத்தலில் ஈடுபடுத்திய முக்கிய ஆசாமியை தற்போது தேடி வருகின்றனர்
.