சென்னை: புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து தினமும் பொதுமக்கள் பூஜை வழிபாடுகள் செய்து வருவார்கள்.
அதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு முன் நவராத்திரி கொலு வழிபாடு நாடு முழுவதும் துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு வருகை மையத்தில் 5 படிகளுடன் கூடிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு படிகளுக்கு பின் மிகப்பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பயணிகள் இந்த கொலுவை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்.
இதையும் படிங்க:தேசிய அளவிலான அடைவுத் தேர்வில் பின்தங்கிய தமிழ்நாடு - பள்ளிக்கல்வித்துறை தகவல்!