துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு மீட்பு விமானம் நேற்றிரவு (நவ.15) வந்தது. அதில் வந்தப் பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது தாரிக் (வயது 36), முகமது பாரீஸ் (வயது 26), சிக்கந்தா் மஸ்தான் (வயது 36), ரகுமான்கான் (வயது 31), தஸ்தகீா் (வயது 34) ஆகிய ஐந்து பேர் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவா்களை சுங்கத் துறையினர் தனி அறைகளுக்குக் கூட்டிச் சென்று சோதனையிட்டனா். அப்போது அவா்கள் உள்ளாடைகளில் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட் ஆகியவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றினா்.
இந்த ஐந்து பேரிடமிருந்து மொத்தம் 1.85 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவற்றின் சா்வதேச மதிப்பு 97.7 லட்ச ரூபாய் ஆகும். இவர்களைக் கைது செய்து சுங்கத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.