இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 22 புற்றுநோயாளிகள், 15 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள், இரண்டு எச்ஐவி நோயாளிகள், இரண்டு கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள் கரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே, இதுபோன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் பல்துறை வல்லுநர்களும் பங்களிப்புடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று ஏற்பட்ட 22 புற்றுநோயாளிகளில் இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
![chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7187092_508_7187092_1589401871499.png)
வாய், தொண்டை, கழுத்து பகுதி புற்றுநோய் ஏற்பட்டவர்கள் 13 பேர், மலக்குடல் புற்றுநோய் ஒருவர், கர்ப்பப்பை புற்றுநோய் இரண்டு பேர், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டு பேர், தொண்டையில் புற்றுநோய் ஒருவர், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று பேர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.
அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் பொழுது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட கரோனா தொற்று நோயாளிகளில் 60 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயும், 40 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த நோயும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கரோனா நோய்க்காக மூன்று திருநங்கைகளும் இங்குச் சிகிச்சை பெற்றனர்" என்றார்.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்