நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதன் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மற்ற மாவட்டங்களில் தற்போது கரோனா பாதிப்பு குறைய தொடங்கியிருக்கிறது. ஆனால், சென்னையில் மட்டும் வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று மட்டும் 203 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் அதிக பட்சமாக சென்னையில் மட்டும் 176 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- தண்டையார்பேட்டை - 101 பேர்
- ராயபுரம் - 216 பேர்
- திரு.வி.க. நகர் - 259 பேர்
- தேனாம்பேட்டை - 132 பேர்
- திருவொற்றியூர் - 19 பேர்
- அடையார் - 21 பேர்
- பெருங்குடி - 9 பேர்
- ஆலந்தூர் - 9 பேர்
- வளசரவாக்கம் - 60 பேர்
- சோழிங்கநல்லூர் - 3 பேர்
- அண்ணாநகர் - 91 பேர்
- கோடம்பாக்கம் - 116 பேர்
- மணலி - 3 பேர்
- மாதாவரம் - 4 பேர்
- அம்பத்தூர் - 33 பேர்
மேலும், 219 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் சொமேட்டோ பையில் வைத்து கஞ்சா விற்ற நபர் கைது!