சென்னை : கன மழை தொடரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 20.42 அடி. மொத்த கொள்ளளவு 2685 மில்லியன் கன அடி.
நேற்று முதல் கன மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று (நவம்பர் 1) காலை நிலவரப்படி விநாடிக்கு 150 கன அடியாக இருந்தது. பின்னர் நீர் வரத்து 1750 கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளும் நீர் நிறைந்து காணப்படுவதால் அங்கிருந்தும் உபரி நீர் மற்றும் மழை நீர் அதிக அளவில் வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் மழை தொடரும் என்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பெண்களை இழிவாக பேசக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு என்ன பிரச்சனை? - அண்ணாமலை