மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து தொடர் கோரிக்கைகள் வந்தன.
இந்த கோரிக்கையினை ஏற்று, மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு 18.11.2020 முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுப்பட்டுள்ளது. இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறாயிரத்து 583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.