ETV Bharat / state

விருது பெற்ற நாவலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்! - கே.வி.ஜெயஸ்ரீ

சென்னை: சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள கே.வி.ஜெயஸ்ரீக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

authour
authour
author img

By

Published : Feb 25, 2020, 9:16 PM IST

"நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக, சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள கே.வி. ஜெயஸ்ரீக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது, தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.வி ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்த இந்த நாவல், மலையாளத்தில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கிறது. சாகித்ய அகாதமி விருது பெறவுள்ள அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகளைப் பெற எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் பார்க்க: ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க கோரிய வழக்கு: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.