ETV Bharat / state

ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு மாறுதல் கலந்தாய்வு! - chennai news

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நடப்புக் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

change-consultation-for-500-teacher-trainers
ஆசிரியர் பயிற்றுநர் 500 பேருக்கு மாறுதல் கலந்தாய்வு!
author img

By

Published : Aug 27, 2021, 6:53 PM IST

சென்னை: இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது.

2021-22ஆம் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திடல் வேண்டும். மேலும், தற்பொழுது தேர்வு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை.

2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும், பணி இடங்களுக்கு பாட வாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு 2021-22ஆம் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதி சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.