ETV Bharat / state

விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3; விமானத்தில் இருந்து வீடியோ எடுத்த பயணி; வைரலாகும் வீடியோ! - விமானத்தில் இருந்து எடுத்த வீடியோ

சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் சீறி பாய்ந்த போது விமானத்தில் இருந்து ஒரு பயணி எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chandrayaan 3
விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3 விமானத்தில் இருந்து வீடியோ எடுத்த பயணி
author img

By

Published : Jul 15, 2023, 8:26 PM IST

சென்னை: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று (ஜூலை 14) நிலவை ஆராய, ரூ.615 கோடி மதிப்பிலான சந்திரயான் 3 விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது வெற்றிகரமாகப் புவி நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகவும், அதன் இயக்கம் திருப்திகரமானதாக இருப்பதாகவும் இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கான பணியில் அயராது பாடுபட்ட (ISRO) இஸ்ரோவின் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது நாடு முழுதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலங்களைத் தரையிறக்கியுள்ளது. அந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஜூலை 31ஆம் தேதி வரை பூமியை 10 முறை சுற்றும் சந்திரயான் 3 விண்கலம், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, நிலவின் தென் துருவ பகுதியில் சுமார் 5 நாட்கள் எந்த கிரகத்தையும் ஒட்டாத பகுதியில் பயணம் செய்யும் சந்திரயான் 3, நேரடியாக நிலவில் இறங்காமல், நிலவையும் சுற்றிவரும் எனவும் . பின்னர் ரோவர் வாகனம் திறந்துவிடப்பட்டு நிலவில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரோவில் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் 'சந்திரயான்-3' திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று அதனை வழிநடத்திச் சென்ற விதம் இந்தியா மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும் பெருமையைச் சேர்த்து உள்ளது. இதற்கு முன்பு சந்திரயான் 1-ல் திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் 2-வில் திட்ட இயக்குநராக வனிதாவும் செயலாற்றிய நிலையில் அந்த வரிசையில் சந்திரயான் 3-ல் திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் பணியாற்றியது தமிழகத்திற்குப் பெருமையான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்த போது விமானத்திலிருந்து ஒரு பயணி எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீல வானத்தில் சந்திரயான் 3 விண்கலம் சீறிப்பாய்ந்து செல்லும் வீடியோ காட்சியை ஒரு பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையிலிருந்து வங்கதேசத்தின் டாக்கா சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இந்த காணொளியைப் பதிவு செய்துள்ளார். இந்த காணொளியைப் பார்த்த பலரும் நடுவானில் சந்திரயானைப் பார்த்த அதிர்ஷ்டசாலி என்று கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ராஜ்ய சபா எம்பி ஆகிறார் அண்ணாமலை? - ராஜஸ்தானில் இருந்து தேர்வாக உள்ளதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.