சென்னை: தலைமை செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நாகராஜ், "தமிழ்நாட்டுக்கு என்று தனி கல்வி கொள்கை வரையறுக்க வேண்டும்.
பல்கலைக்கழக சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக துணைவேந்தரை ஆளுநர் தேர்வு செய்கிறார். அப்போது முதலமைச்சரிடம் ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது...