ETV Bharat / state

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டின் மழை

தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை
chance to rain spell
author img

By

Published : Jul 27, 2021, 2:16 PM IST

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 27) சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 28: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 29 முதல் ஜூலை 31 வரை: கோயமுத்தூர், நீலகிரி, கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள்

ஜூலை 27:

தமிழ்நாடு- ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூலை 27:

வட கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் பலத்தக் காற்று வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 28:

மத்திய வங்க கடல், வடக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஜூலை29:

மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

ஜூலை 29 முதல் 31 வரை:

கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஜூலை 27.07.2021 முதல் 31 வரை:

தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக தோன்றிய புதிய அருவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.