தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய லுலு மால் தலைவர்!