ETV Bharat / state

வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - heavy rain

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chance-of-heavy-rain-in-the-northern-districts-in-tn
வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Sep 22, 2021, 12:49 PM IST

சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் - புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் - காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப். 23: கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

செப். 24: விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் - காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப். 25: கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப். 26: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இரண்டு நாள்களுக்கு இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலநிலை அவசர நிலையைப் பிரகடனத்தப்பட வேண்டும் - பாமக கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.