ETV Bharat / state

6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - chennai rain

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Nov 21, 2022, 3:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவ.21) காலை 08.30 மணி அளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு - வடகிழக்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது, மேற்கு - வடமேற்குத் திசையில் தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு - புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவ.21) ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ 22ஆம் தேதி ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாடு ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.23ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.24, 25 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்; சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தரைக்காற்று சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 30 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், ’இன்றும்(நவ.21), நாளையும்(நவ.22) ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழ்நாடு - புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (நவ.22) காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது’ எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பரவும் கண் நோய்(Madras Eye) - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.