ETV Bharat / state

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கீழடுக்குச் சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Jun 19, 2022, 6:08 PM IST

சென்னை: வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று (ஜூன் 19) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாளில் (ஜூன் 20 - 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்; ஜூன் 22, 23ஆகிய தேதிகளில் வடதமிழ்நாடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

லட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21, 22, 23ஆகிய தேதிகளில் கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீரில் மூழ்கும் அபாயம்... உடையும் நிலையில் உள்ள திருப்பத்தூர் ஏரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.