ETV Bharat / state

தொழிலதிபர் கடத்தல் விவகாரம் - இந்துமஹா சபை தலைவர் கைது - Businessman kidnapping case

தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக தொடர்பான விவகாரத்தில் அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

kodambakkam
கோடம்பாக்கம் ஸ்ரீ
author img

By

Published : Jul 15, 2021, 7:04 AM IST

சென்னை : அய்யம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவர் 2019ஆம் ஆண்டு தன்னையும், தனது குடும்பத்தினரையும் கடத்தி சொத்துகளை அபகரித்ததாக புகாரளித்திருந்தார்.

புகாரின் முகாந்திரம் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல்செய்ய அப்போது தமிழ்நாடு டிஜிபியாக இருந்த திரிபாதி, சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். விசாரணையில் தொழிலதிபர் சீனிவாச ராவ், ராஜேஷிடம் கொடுத்த கடனுக்காக ரவுடிகள், காவல் துறை அலுவலர்கள் மூலம் பிரச்சினை கொடுத்தது தெரியவந்தது.

தொடர்ந்து, சென்னை திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் சீனிவாச ராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய, அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

kodambakkam
கோடம்பாக்கம் ஸ்ரீ

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அலுவலர்கள் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்ய, சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். முதற்கட்டமாக, கோடம்பாக்கம் ஸ்ரீயை கானத்தூரில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், "ஸ்ரீனிவாச ராவ், அவரது மகன் தருண் பிரசாத் ஆகியோர் வெங்கடேசனிடம் ஏமாந்த பணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது, சீனிவாச ராவிடம் வாங்கி ஏமாற்றிய பணத்தை தான் தொழிலதிபர் ராஜேஷிடம் வெங்கடேசன் கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஸ்ரீனிவாச ராவ் பாஜகவை சேர்ந்த ஒருவர் மூலம், கோடம்பாக்கம் ஸ்ரீயின் உதவியை நாடியுள்ளார். அவர் தான் இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

குறிப்பாக பண்ணை வீடு ஒன்றில் ராஜேஷின் தாயைப் தனியாகவும், மனைவியை தனி அறையில் வைத்து மிரட்டியும் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.

ஏற்கனவே கோடம்பாக்கம் ஸ்ரீ மீது, அனைத்திந்திய இந்து மகாசபை மாநில மகளிர் அணி செயலாளர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டிலும், சென்னையில் விமல் சந்த் என்ற தொழிலதிபரை மோசடி செய்த விவகாரத்திலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோடம்பாக்கம் ஸ்ரீ மீது இதுபோன்ற பல்வேறு மோசடி புகார்கள் சென்னை காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விமல் தொழிலதிபரை மோசடி செய்த விவகாரத்தில் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோடம்பாக்கம் ஸ்ரீயை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கோடம்பாக்கம் ஸ்ரீயை, காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம்: மனைவி, மாமியாரை குத்திக் கொன்ற நபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.