ETV Bharat / state

தனியாக சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை

author img

By

Published : Sep 18, 2020, 3:28 PM IST

சென்னை: திருவல்லிக்கேணியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த திருடனை புகார் அளித்த ஆறு மணி நேரத்தில் ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

chennai  திருவல்லிக்கேணி  thiruvallikeni  ஐஸ் அவுஸ் காவல்துறை  ice house police department  சென்னை  சங்கிலி பறிப்பு  chain snatch  6 hours  6 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை
தனியாக சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் நேற்று (செப்.17) இரவு வேலைகளை முடித்துவிட்டு சுமார் எட்டு மணி அளவில் பார்த்தசாரதி சாமி தெருவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னாலிருந்து வந்த இளைஞர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞன் மற்றொரு நபரிடம் சென்று கொடுத்துவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

தனியாக சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

இதனைத் தொடர்ந்து ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை
வைத்து விசாரணை நடத்தினர். இதில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜய் என்ற சொறி விஜய், சக்திவேல், 17 வயது சிறுவன் ஒருவன் என மூன்று பேர் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜய் என்ற சொறி விஜயும், சக்திவேலும் இருவரும் இணைந்து 17 வயது சிறுவனுக்கு எப்படி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பயிற்சி அளித்ததாகவும், அதன் அடிப்படையில் அந்தச் சிறுவன் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் புகார் அளித்த ஆறு மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளைக் கைது செய்தனர். அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள சொறி விஜய் பலமுறை குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரிவாளால் வெட்டி வழிப்பறி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.