தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2017 -2020ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு மருத்துவப் பணி, மருத்துவ சார்நிலை பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில் 59 இடங்களை நிரப்புவதற்கு 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வினை 4ஆயிரத்து 308 நபர்கள் எழுதினர். இவற்றில் தகுதி பெற்ற தேர்வர்கள் டிசம்பர் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தங்களின் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி சேவை மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 2015 -2019ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில் 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பதவிக்கு 2019 ஆகஸ்ட் 24ஆம் தேதி நடந்த தேர்வில் 8ஆயிரத்து 851 பேர் தேர்வெழுதினர். இதில், தகுதி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை டிசம்பர் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் அரசு இ-சேவை மையங்களின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அலைக்கற்றை ஏலத்தில் விட அமைச்சரவை ஒப்புதல்!