சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் கரோனவால் பாதிக்கப்பட்டோரும் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் வழி செய்துள்ளது. அதன்படி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். அப்படி வருவோர் கரோனா சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா பள்ளியில் சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி குடும்பத்தினருடன் தனது வாக்கினைச் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஜனநாயக கடமையாற்ற மக்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும், வாக்களிக்காமல் வீட்டில் இருக்கக் கூடாது.
5794 வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சென்னையில் வாக்குப் பதிவு நிலவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும். தங்களது வேட்பாளர்களைப் பொதுமக்கள் தேர்ந்தெடுப்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
கரோனா நோயாளிகளுக்கு தனி நேரம்
5 மணி முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். கரோனா சான்றிதழ் கொண்டு வரவேண்டும். சென்னையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 இடங்களில் பொருத்தும் பணி தாமதமானது, அது சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பதிவு எந்திரம் பழுது