இதுகுறித்து மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என்பதால் பூண்டி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
எனவே கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகிய நீர்பிடி பகுதிகளிலுள்ள சிறு மற்றும் நடுத்தர அணைகளை பொதுப்பணித்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை முழுநேரமும் கண்காணிக்க வேண்டும்' என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.