சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிகம் பதிவாகியது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அப்படி தொடர் கனமழை பெய்த 25 மாவட்டங்களில், 15 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் 9,600 குடிசைகள், 2,200 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் 50 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் நாசமடைந்துள்ளன. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கில் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு நிவாரணம் வழங்க 2,079 கோடி ரூபாய் ஒதுக்கக்கோரி தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய குழு வருகை
இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை (flood affected area) ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு, நாளை மறுநாள் (நவ.21) தமிழ்நாடு வரவுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், நிதித்துறை ஆலோசகர், விவசாயத்துறை இயக்குநர், நீர்வளத்துறை இயக்குநர் உள்ளிட்ட பல அலுவலர்கள் வர இருக்கின்றனர்.
இவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை (flood affected area) ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின், தமிழ்நாட்டில்ற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கும்.
இதையும் படிங்க: Vellore House Collapse: வீடு இடிந்து 9 பேர் உயிரிழந்த பரிதாபம்