சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூலை 10) மத்திய சுகாதாரக் குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
முதலமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.உமாநாத் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் நேற்று மாலை(ஜூலை 9) சுகாதாரக் குழுவினர் தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் நோய்த் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதும் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்கள் உடன் காணொலி அழைப்பின் வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கரோனா சமூகப் பரவலாக மாறவில்லை' - எடப்பாடி பழனிசாமி