ETV Bharat / state

மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை - சீமான் எச்சரிக்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீமான்
சீமான்
author img

By

Published : Feb 11, 2021, 2:42 PM IST

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தபோதே தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழைப் புறக்கணிப்புச் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழின விரோத மனப்பான்மை

இது தமிழர்களை அவமதிப்பு செய்யும் நோக்கத்தோடு திட்டமிட்டு நிகழ்த்தப்படும் தமிழின விரோத மனப்பான்மையின் வெளிப்பாடேயாகும். ஒரு வகுப்பிலுள்ள 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும் எனவும், அதுவும் பகுதிநேர ஆசிரியர்தான் நியமிக்கப்படுவார் எனவும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் எனவும், தமிழ் கற்பதற்குப் பல தடைகளைக் கொண்டு வந்து தமிழைக் கற்கவிடாது செய்யும் மத்திய அரசின் இப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்மொழி அழிப்பு: காங்கிரஸ் Vs பாஜக

விடுதலைபெற்ற இந்தியாவில், தமிழ் மொழிக்கெதிரான நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் அரசுகள் தொடர்ந்து எடுத்து வந்துள்ளன. ஆனால், விடுதலைபெறுவதற்கு முன்பிருந்தே அந்நிய மொழி ஆதிக்கத்தைத் தமிழ்நாடு எதிர்க்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் தாய்த்தமிழுக்குத் தீங்கு நேரும் போதெல்லாம் தமிழ்நாடு காட்டிய கடுமையான எதிர்வினைகளால் அவ்வப்போது மத்திய அரசு அடங்கிப்போனாலும், நீறுபூத்த நெருப்பாகக் கனன்று அவை மீண்டும் மீண்டும் தமிழர்களைச் சீண்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. அதிலும், முந்தைய காங்கிரசு அரசைவிடப் பன்மடங்கு கூடுதலாகத் தமிழ்மொழி அழிப்பு வேலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுவருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

ஏமாற்றும் நாடகம்

இந்தி நாள் கொண்டாட கட்டாயப்படுத்துவது, சமஸ்கிருத வார விழா எடுக்க வற்புறுத்துவது, செம்மொழிகள் வளர்ச்சிக்கான நிதியில் தமிழைவிடச் சமஸ்கிருதத்திற்கு 20 மடங்கு அதிகமான நிதியினை ஒதுக்கீடு செய்வது, மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் தமிழ்நாட்டில் திணிக்க முயல்வது, மத்திய அரசு அதிகாரிகள் மூலம் மொழித்திணிப்பையும், இன விரோதத்தையும் தமிழர்கள் மீது வெளிப்படுத்துவது, தமிழ்நாடு அதிகாரிகளுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்புவது எனத் தமிழ்மொழியை இழிவுபடுத்தும் மத்திய அரசின் செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் தமிழ்க்குழந்தைகள் தாய்மொழியான தமிழைக் கற்பதற்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது மோடி அரசு. இவையெல்லாம் தமிழ்ப்பிள்ளைகள் தாய்மொழிக் கற்பதைத் தடுத்து அவர்கள் மீது இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்க முனையும் மத்திய அரசின் சதிச்செயலின்றி வேறில்லை.

மேடைக்கு மேடை தமிழின் பெருமை பேசும் மோடி

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க விருப்பமா? என்ற கேள்வியைத் திட்டமிட்டுத் திணிக்கும் மத்திய அரசு, தமிழைக் கற்பிக்க மட்டும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்? எட்டாம் வகுப்பு வரை முழுக்க முழுக்கத் தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கப்படுமெனப் புதிய கல்விக்கொள்கையில் அறிவித்த மத்திய அரசு, தற்போது கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழியான தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்கக்கூடக் கடும் நிபந்தனைகளை விதிப்பதும், அதுவும் ஆறாம் வகுப்பு முதலேதான் தமிழ் கற்பிக்கப்படும் என அறிவித்திருப்பதும் அவர்கள் கூறிய தற்சார்புப் பொருளாதாரக்கொள்கைபோலத் தாய்மொழி வழிக் கல்விக் கொள்கையும் மற்றுமொரு ஏமாற்றும் நாடகம் என்பதையே காட்டுகிறது. ஆனால், இதே கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாயப்பாடமாகவும், 9 ஆம்வகு்பபு முதல் 12 ஆம் வகுப்பு வரை விருப்பப்பாடமாகவும் உள்ளது. மேடைக்கு மேடை திருக்குறளையும், தமிழின் பெருமையையும் பிரதமர் மோடி பேசுவதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற நடத்தும் நாடகம் என்பதையே இவையெல்லாம் உணர்த்துகிறது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சி

ஏற்கனவே, ஐம்பதாண்டுக் காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தமிழ் வழியில் பயிலாமலேயே பட்டப்படிப்புவரை படிக்கும் இழிநிலையுள்ளது. மேலும், அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடமும் ஆங்கில வழிக்கல்வியைப் புகுத்தி தாய்மொழி வழிக்கல்வியே முற்றாக அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் தமிழர்கள், தமிழை ஒரு பாடமொழியாகக்கூடத் தமிழ்நாட்டில் படிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்க முயல்கிறது மத்திய அரசின் இந்தப் புதிய நிபந்தனைகள். அதனை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தார்மீகக்கடமையாகும்.

தமிழர்களின் பிறப்புரிமை

ஆகவே, தமிழர்களின் பிறப்புரிமையான தாய்மொழிக் கல்வியைப் பெறுவதில் தடையை ஏற்படுத்தும் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தமிழர்களின் கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேரிட்டு, தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்குமென எச்சரிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.