ETV Bharat / state

தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,335 குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம்

தமிழ்நாட்டில் தற்போது தேங்காய் அதிக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், மத்திய அரசு தேங்காய் பருப்புக்கு (கொப்பரை தேங்காய்) குவிண்டால் ஒன்றுக்கு 10 ஆயிரத்து 335 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயித்துள்ளது.

author img

By

Published : Dec 30, 2021, 7:23 PM IST

கொப்பரை தேங்காய்
கொப்பரை தேங்காய்

சென்னை: தமிழ்நாட்டில் 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் தேங்காய் பருப்பு (கொப்பரை தேங்காய்) பரிவர்த்தனை செய்யப்பட்டுவருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், ஈரோடு மாவட்டத்திலுள்ள பூதப்பாடி, அந்தியூர், அவல்பூந்துறை, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, சத்தியமங்கலம், எழுமாத்தூர், வெப்பிலி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம், பரமத்திவேலூர், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி, காங்கேயம், வெள்ளகோயில், மூலனூர், முத்தூர், மதுரை மாவட்டத்திலுள்ள த.வாடிப்பட்டி ஆகிய 20 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேங்காய் பருப்பு பரிவர்த்தனை செய்யப்பட்டுவருகிறது.

மேலும், ஆனைமலை, ஒட்டன்சத்திரம், அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், உசிலம்பட்டி, பரமத்திவேலூர், தேனி, பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, வெள்ளகோயில், குடியாத்தம், ராஜபாளையம் ஆகிய 13 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டத்தின் மூலம் மின்னணு பரிவர்த்தனை செய்யப்பட்டுவருகிறது.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேங்காய் பருப்பை காயவைப்பதற்கான உலர்கள வசதியும், தேங்காயை தேங்காய் பருப்பாக மாற்றுவதற்கு உலர்த்தும் எந்திர வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகள் தங்கள் தேங்காய் பருப்பு மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைத்து ஐந்து விழுக்காடு வட்டியில் ஆறு மாதங்கள் வரை அதிகபட்சம் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் வசதியும் உள்ளது.

தற்போது தேங்காய் பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு 10 ஆயிரத்து 335 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (டிசம்பர் 29) ஈரோடு மாவட்டம் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு 10 ஆயிரத்து 476 ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

எனவே தென்னை விவசாயிகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெறுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் கனமழை - போக்குவரத்து நெரிசல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.