சென்னை தரமணியில் 2008ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகுணரச் செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு கடந்த 13 ஆண்டுகளாகவே நேரடி இயக்குநர் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று பேராசிரியர் சந்திரசேகரை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.
இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும்வகையில் நடிகர் ரஜினிகாந்த் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”தமிழ் மொழியை மேம்படுத்தும்விதமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு முதல் இயக்குநராக பேராசிரியர் சந்திரசேகரை நியமனம்செய்தது பாராட்டுக்குரியது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வீல் சேரில் அமர்ந்திருக்கும் தாயுடன் சகோதரனை தேடும் சிறுமி!