ETV Bharat / state

செந்தில் பாலாஜி மீதான வேலை மோசடி வழக்கு- போக்குவரத்துத்துறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை

author img

By

Published : Jul 3, 2023, 7:49 PM IST

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில், விசாரணையின் ஒரு பகுதியாக பணிமனைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் குற்றப்பிரிவு காவல் துறையினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட பணமோசடி வழக்கு

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில், இதுவரை 1 மாத காலத்தில் 150 போக்குவரத்து ஊழியரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் அடுத்தக்கட்டமாக போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், செந்தில்பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தர்மராஜ், ஒய்.பாலாஜி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் அமலாக்கத் துறையும் தங்களது தரப்பு விசாரணையை நடத்த அனுமதியளித்து மே மாதம் 16-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பணியமர்த்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 150க்கும் மேற்பட்ட நபர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது 2018 ஆம் ஆண்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அந்த வழக்கையும் விசாரித்து 2 மாதத்திற்குள் அறிக்கையை சமர்பிக்கும் படி உச்சநீதிமன்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையை துவங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது நேர்முகத்தேர்வு நடத்திய அதிகாரிகள், பணிமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடுத்தக்கட்டமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக இன்று அடையாறு மற்றும் அயனாவரம் பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்த விவகாரம் - முதல்முறையாக மனம் திறந்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.