ETV Bharat / state

‘உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிக்க மத்திய அரசின் உத்தரவு வேண்டும்’ - நளினியின் தாய் பத்மா

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

center should allow to Nalini murugan interact with abroad relations, notice to state

author img

By

Published : Jul 8, 2020, 3:23 PM IST

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பத்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், வீடியோ காலில் பேச அனைத்து கைதிகளுக்கும் அனுமதி வழங்கும்போது, நளினிக்கும் முருகனுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. வெளிநாட்டு உறவினர்களுடன் பேச எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை.

கரோனா காலத்தில் கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் பேசக்கூடாது என கூறவில்லை.

கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க சிறை அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் கைதிகள் இதற்கு முன் பேசியதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், நாம் அதை உருவாக்குவோம் எனக் கூறி, மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.