ETV Bharat / state

சபரிமலை ஐயப்பன் சாமியை உறங்க வைக்கும் 'ஹரிவராசனம்' பாடலுக்கு நூற்றாண்டு விழா...

தேசிய அளவிலான ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு கூட்டம் இன்றும் (ஜூன் 10) நாளையும்  சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தொடக்கி வைக்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் சாமியை உறங்க வைக்கும் 'ஹரிவராசனம்' பாடலுக்கு நூற்றாண்டு விழா...
சபரிமலை ஐயப்பன் சாமியை உறங்க வைக்கும் 'ஹரிவராசனம்' பாடலுக்கு நூற்றாண்டு விழா...
author img

By

Published : Jun 10, 2022, 8:18 AM IST

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து வழிபாடு நடக்கும் நாட்களில் இரவு இசைக்கப்படுகின்ற 'ஹரிவராசனம்' என்னும் பாடலை இயற்றி நூறு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதனை ஒட்டி பல்வேறு ஆன்மீக, அய்யப்ப அமைப்புகளை ஒருங்கிணைத்து தேசிய அளவிலான ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து 18 மாதங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்திட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் திட்டமிட்டிருப்பதாக அதன் தேசிய பொதுசெயலாளர் ஈரோடு ராஜன் தெரிவித்தார். இது குறித்து நேற்று (ஜூன்.9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய அளவிலான ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு கூட்டம் ஜூன் 10 மற்றும் ஜூன் 11 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் சாமியை உறங்க வைக்கும் 'ஹரிவராசனம்' பாடலுக்கு நூற்றாண்டு விழா...
சபரிமலை ஐயப்பன் சாமியை உறங்க வைக்கும் 'ஹரிவராசனம்' பாடலுக்கு நூற்றாண்டு விழா...

இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஹரிவராசனம் நூற்றாண்டு விழா லோகோ வெளியிட்டு உரையாற்றி கூட்டத்தை முறைப்படி தொடக்கி வைக்கிறார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இளையராஜா, கே.எஸ்.சித்ரா, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் அனந்தகோபன், பந்தளம் அரண்மனை சசிகுமார்வர்மா, சபரிமலை தந்திரி மகேஷ் மோகனரு, சென்னை சின்மயாமிஷன் சுவாமி.மித்ரானந்தா, கோழிக்கோடு அத்வைத ஆசிரமம் தலைவர் சுவாமி சிதானந்தபுரி போன்றவர்கள் மேடையை பங்கிட்டு உரையாற்றுவார்கள் என தெரிவித்தார்.

இதில், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தேசிய தலைவர் டி.பி.சேகர் தலைமை தாங்குகிறார். முன்னாள் மிசோராம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாடுவதன் தேவை பற்றி கருத்துரை ஆற்றுவார். சமாஜம் தேசிய பொது செயலாளர் ஈரோடு ராஜன் அறிமுகம் செய்து வரவேற்புரை வழங்குவார். ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு புரவலர்களையும், பொறுப்பாளர்களையும் அறிவித்த பிறகு, தேசிய இணை பொது செயலாளர் எஸ்.வினோத்குமார் நிர்வாக குழு உறுப்பினர்களையும் மற்ற உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைக்கிறார் என குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குலசாமியாக காக்கும் ராவுத்தர்..! - இஸ்லாமியரை வழிபடும் கிராமத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.