ETV Bharat / state

'நான் அவரை விமர்சிக்க மாட்டேன்!' - கனிமொழியின் தமிழிசை பாசம் - kanimozhi

சென்னை: தமிழிசை எது வேண்டுமானாலும் பேசிக்கொண்டு போகட்டும். நான் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்யமாட்டேன் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi press meet
author img

By

Published : Apr 17, 2019, 9:14 PM IST

சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டிளித்தார். அப்போது, 'நாட்டில் பாஜக ஆட்சி இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் வருமானவரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு அமைப்பு இவை எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக்கொண்டு அவர்கள் நினைப்பதற்கு எல்லாம் இயக்குகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பு வந்தபின் வருமானவரித் துறையும் தேர்தல் ஆணையமும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு இருக்கும் அளவிற்கு நடந்துகொள்கிறார்கள்.

கனிமொழி பேட்டி
நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிராகவுள்ள கட்சிகள் மீது வருமானவரி சோதனை, தேர்தல் ஆணைய பிரச்னை என தொடர்ந்து நடந்துவருகிறது. அதிமுக, பாஜக மீது கூறும் புகார்களை தேர்தல் ஆணையம் கவனிப்பதில்லை. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில், தோல்வி பயத்தினால் எல்லா இடங்களிலும் சோதனை செய்கின்றனர். சோதனைக்கு வரும்போது உரிய ஆவணங்களின்றி வருகின்றனர்.
வேட்பாளர் என்பதால் சோதனை செய்ய முடியுமா? இது திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் தேர்தல் நேரத்தில் கெட்டப் பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றன. தமிழிசை, அதிமுக தலைவர்கள் வீட்டில் கோடி கோடியாக பணம் இருப்பதாக ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டிற்கு எந்தவித பதிலும் இல்லை. இது காழ்புணர்ச்சியுடன் செய்யக்கூடியது.
எனக்கு என்று ஒரு தரம் உள்ளது. யாரையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சனம் செய்ய மாட்டேன். தமிழிசை எது வேண்டுமானாலும் பேசிக்கொண்டு போகட்டும். நான் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்யமாட்டேன். நாட்டை காப்பாற்றுங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.
தூத்துக்குடியில் ஏன் சோதனை செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் வேலூர் தொகுதியை போல் தூத்துக்குடி தொகுதியிலும் நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அவர்களுடைய ஆசை நிறைவேறாது' என தெரிவித்தார்.

Intro:சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு பேட்டி

Body:சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு பேட்டி

பிஜேபி ஆட்சியில் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் வருமான வரித்துறை, ஆர்.பி.ஐ சி.பி.ஐ இவற்றை எல்லாவற்றையும் தன் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் நினைப்பதற்கு எல்லாம் இயக்குகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது

இந்த தேர்தல் அறிவிப்பு வந்த பின் வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையமும் பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு இருக்கும் அளவிற்கு நடந்து கொள்கிறார்கள்

நாடு முழுவதும் பாஜக விற்கு எதிராக உள்ள கட்சிகள் மீது வருமான வரி சோதனை தேர்தல் ஆணைய பிரச்சினை என தொடர்ந்து நடந்து வருகிறது

அதிமுக பாஜக மீது கூறும் புகார்களை தேர்தல் ஆணையம் கவனிப்பதில்லை எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும் சுற்றியுள்ளவர்களை துன்புறுத்தும் வகையில் தோல்வி பயத்தில் செய்து வருகின்றனர்

தோல்வி பயத்தினால் எல்லா இடங்களிலும் சோதனை செய்கின்றனர் சோதனைக்கு வரும் போது உரிய ஆவணங்களின்றி வருகின்றனர் யார் பெயரில் சோதனை என்று கூறுகின்றனர் வேட்பாளர் என்பதால் சோதனை செய்ய முடியுமா இது திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் தேர்தல் நேரத்தில் கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றன

தமிழிசை அதிமுக தலைவர்கள் வீட்டில் கோடி கோடியாக பணம் இருப்பதாக ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டிற்கு எந்தவித பதிலும் இல்லை இது காழ்புணர்ச்சியுடன் செய்யக்கூடியது

எனக்கு என்று ஒரு தரம் உள்ளது யாரையும் தனிப்பட்ட முறையில் தரம் குறைவாக விமர்சனம் செய்யக்கூடாது தமிழிசை எது வேண்டுமானாலும் பேசிக் கொண்டு போகட்டும் நான் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்ய மாட்டேன் என்றார்

நாட்டை காப்பாற்றுங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் என கூறினார்

தமிழகத்தில் அதிமுக பாஜக ஆகியவற்றிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் அதிமுக பாஜக ஆகிய கட்சிகள் தமிழகத்திற்கு செய்த துரோகங்கள் மக்கள் மனதில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடியில் ஏன் சோதனை செய்தார்கள் என்று தெரியாது ஆனால் வேலூர் தொகுதியை போல் தூத்துக்குடி தொகுதியிலும் நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் அவர்களுடைய ஆசை நிறைவேறாது

Conclusion:இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.