நவம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கல்லறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லறைகள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து, கல்லறைகளுக்கு வண்ணம் பூசுவர். மேலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்களை நினைவு படுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றி, மரியாதை செலுத்துவார்கள்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் நேற்று அதிக அளவு கிறிஸ்தவர்கள் வருகை தந்து, தங்கள் முன்னோர்களுக்கும், நெருங்கிய சொந்தங்களுக்கும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதேபோல் பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி என தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் இந்த கல்லறை தினமானது கிறிஸ்தவ மக்களால் அனுசரிக்கப்பட்டது.
இதையும் படிங்க : கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் மூதாதையர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை !