சென்னை சைதாப்பேட்டை ரங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (25). இவர் தரமணி ஸ்ரீராம் நகரில் சாம் மொபைல் என்ற பெயரில் செல்போன் உதரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்திவருகிறார். கடந்த 28ஆம் தேதி இரவு அவரது கடைக்கு வாடிக்கையாளர் போல வந்த ஒருவர் கடையில் உதிரிபாகங்கள் வாங்குவது போல நடித்து அங்கு இருந்த இரண்டு செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.
இதையடுத்து மறுநாள் கடையிலிருந்த செல்போன்கள் காணாமல்போனதை அறிந்த யுவராஜ் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது கடைக்கு வந்து பொருட்களை வாங்குவது போல நடித்து செல்போன்களை திருடிச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து யுவராஜ் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.