சென்னை - கொளத்தூர் பாலகுமாரன் நகர் 1ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர், கமலா. இவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டின் வெளியே அமர்ந்துள்ளார். அப்போது, செல்போன் சார்ஜர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தினால், வீட்டிலிருந்த வாஷிங் மெசின் உள்ளிட்டப் பல பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் தீயணைப்புத்துறை அலுவலர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்கொள் கொண்டுவந்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக, சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: தனியார் பெட்ரோல் பங்க் அருகே தீ விபத்து - அணைக்க முடியாமல் திணறிய ஊழியர்கள்