தேமுதிக தலைவர் விஜயகாந்த், கரோனா பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) மாலை சென்னை மணப்பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஜயகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவர் பூரண குணமடைய வேண்டி திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்/
அந்த வழியில் நடிகர் ராதாரவி கூறுகையில், "எனது நீண்ட கால நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
நடிகர் சரத் குமார் கூறுகையில், தேமுதிக தலைவரும் நண்பருமான விஜயகாந்த் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.