சென்னை : தாம்பரம் அடுத்து காமராஜபுரம் ஐய்யப்பா நகரை சேர்ந்த மென் பொறியாளர் ஸ்ரீமதி (27), குப்பை கொட்டுவதற்காக நேற்று (ஜூலை 14) சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இரு மர்ம நபர்கள், ஸ்ரீமதியிடமிருந்து 5 சவரன் தங்கச் சங்கலியை பறித்துவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்து அப்பெண் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
முககவசம் அணிந்த கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வது அதில் பதிவாகியுள்ளது. அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் போட்டி: 2 இளைஞர்களை வெட்டிய 6 பேர் கைது