ETV Bharat / state

கோயில்களில் வைக்கப்படும் CCTV - கண்காணிக்க அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை - அனைத்து கோயில்களில் சிசிடிவி

CCTV fixed in temples : திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் வகையிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

CCTV fixed in temples and control room in the office of the Commissioner of the Treasury to monitor, CCtv in all temples
CCTV fixed in temples and control room in the office of the Commissioner of the Treasury to monitor
author img

By

Published : Jan 12, 2022, 5:30 PM IST

சென்னை: CCTV fixed in temples: இந்து சமய அறநிலையத்துறை ITMS ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத்திட்டம் செயலாக்கத்தின் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள முக்கியத்திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளைக் கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்களின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறையில் அன்னானத் திட்டம், முடிக்காணிக்கை திட்டம், சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு சிரமமின்றி தரிசனத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ள திருக்கோயில்கள் ஆகியவற்றை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலை மூலம் கண்காணிக்க முடியும்.

எந்ததெந்த கோயில்களில் சிசிடிவி கேமராக்கள்?

​அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திருக்கோயில்களிலும் அன்னதானக் கூட சமையலறை, பக்தர்கள் உணவருந்தும் இடம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், முடிக்காணிக்கை செலுத்தப்படும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அதிகளவு பக்தர்கள் கூட்டம் வருகை தரும் திருக்கோயில்களில் மாதந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் திருக்கோயில்களில் சிறப்பு தரிசன வழிகளில் போதிய எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

​இதன்மூலம் வெளிப்படைத்தன்மையுடன் திருக்கோயில்களில் நடைபெறுவதை உடனுக்குடன் கண்காணிப்பதுடன் குறைகளையும் உடனடியாக களைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அஞ்சாத சிங்கம் என் காளை... அது பஞ்சா பறக்கவிடும் ஆளை- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.