10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 20ஆம் தேதி முடிவடைகிறது. 40 மொழிப்பாடங்கள், 34 இதர பாடங்கள் உட்பட 77 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மொழிப்பாடங்களை தொடர்ந்து முக்கியப் பாடங்களான ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கான தேர்வு அட்டவணையையும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வு நடைபெறும் நேரத்தையும் கால அட்டவணையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் மாணவர்களுக்கான வினா மற்றும் விடைத்தாள் வழங்கும் நேரம் ஒரே மாதிரியாக இருக்கும்.
காலை 10.30 மணிக்கு முதல் தேர்வு தொடங்கி 1.30 மணிக்கு முடிவடைகிறது. 19 பாடப்பிரிவுகளுக்கு 1.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடையும். எட்டு பாடப்பிரிவுகளுக்கு காலை 10: 30 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது. தேர்தல் முடிவுகள் மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லேப்டாப்பை திருடிய ஓலா ஓட்டுநர் - சிக்கிய சிசிடிவி காட்சி!