ETV Bharat / state

திமுக வெற்றி குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் - Minister Saroja

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது எப்படி என சிபிஐ விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயக்குமார்
author img

By

Published : Sep 30, 2019, 2:36 PM IST

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சரோஜா பேசுகையில், "ஏழை எளிய மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் கர்ப்பிணிகளுக்கு இந்தச் சமுதாய வளைகாப்பு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. மாநிலத்திலுள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

குழந்தை ஆரோக்கியமாகவும் எந்தவித நோய் நொடி இல்லாமலும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்க வேண்டும். மருத்துவத் துறையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்திவருகிறது" என்றார்.

தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், பொதுநலன் மற்றும் சமூக நல நோக்கத்தோடு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்றார். அதில் தனியார் மருத்துவமனையில் பேரம் பேசுவது போன்ற ஏதாவது தவறு ஏற்பட்டால் அதனை இரும்புக்கரம் கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ள கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார், "மக்களவைத் தேர்தலில் திமுகவினர் குறுக்கு வழியில் வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தில் செயல்படுவது குறித்து ஏற்கனவே கூறியுள்ளேன். இந்த விவகாரத்தை மத்திய அரசு எளிதில் விட்டுவிடக் கூடாது. திமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை வெளிக்கொண்டுவர வேண்டும்.

திருமங்கலம் சூத்திரத்தை கொண்டுவந்தவர்கள் திமுகவினர்தான்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா செய்தியாளர்கள் சந்திப்பு

நீட் வேண்டாம் என்பதுதான் எங்கள் கருத்து. இதில் சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து புகார்கள் வந்தால் அதன் மீதும் ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

பாஜக - அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது. தலைவர்கள் இல்லாத காரணத்தினால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை" என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: கல்லூரி பேராசிரியை கடத்தல் - அதிமுக பிரமுகர் மீது புகார்

Intro:Body:திமுக வெற்றி குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு  கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில்  500க்கும் மேற்பட்ட கர்ப்பிணிபெண்களுக்கு  சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா  கர்ப்பிணிபெண்களுக்கு நலங்கு வைத்து சீர்களை வழங்கினார். மேலும்,கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து எடுத்துக் கூறும் வகையில் கண்காட்சியும்  அமைக்கபட்டிருந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரோஜா ,

ஏழை எளிய மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் கர்ப்பிணிகளுக்கு இந்த சமுதாய வளைகாப்பு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் கர்பிணிகள் என்னென்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களின் மூலம் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை ஆரோக்கியமாகவும் எந்தவித நோய் நொடியும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

பொதுநலன் மற்றும் சமூக நல நோக்கத்தோடு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதில் தனியார் மருத்துவமனையில் பேரம் பேசுவது போன்ற ஏதாவது தவறு ஏற்பட்டால் அதனை இரும்பு கரம் கொண்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ள கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பாராளுமன்றத் தேர்தலில் திமுக வினர் பணம் உபயோகித்து குறுக்கு வழியில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் செயல்படுவது குறித்து ஏற்கனவே கூறியுள்ளேன். இந்த விவகாரத்தை மத்திய அரசு எளிதில் விட்டு விடக்கூடாது. திமுக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை வெளிக் கொண்டுவர வேண்டும். குறுக்கு வழியில் பணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் திமுக. ஜனநாயகத்தை நம்பி இருப்பவர்கள் அல்ல, திருமங்கலம் பார்முலாவை கொண்டு வந்தவர்கள் திமுகவினர் தான், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
நீட் வேண்டாம் என்பது தான் எங்கள் கருது. இதில் சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து புகார்கள் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆள் மாறாட்டம் போன்ற குற்றங்களில் ஈடுபடு ஈடுபடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நேற்று நடைபெற்ற தமிழிசை பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாததற்கு  தேர்தல் பணி தான் காரணம் என்றும் வேறு எந்த காரணமும் இல்லை. பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது. தலைவர்கள் இல்லாத காரணத்தினால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை என்று கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.