ETV Bharat / state

பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணை தொடங்கியது

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கியது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 6, 2022, 6:35 PM IST

Updated : Nov 6, 2022, 8:56 PM IST

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் 2008 ஆம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர் பாஷா, சுப்பராஜ் ஆகியோர் சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்காளான டிஎஸ்பி காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதனிடையே காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்பின், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் 2007ஆம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் டிஎஸ்பி காதர் பாஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் அவர் மீண்டும் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரினார். குறிப்பாக, பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கிலும் தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், ஜாமீனில் விடுதலையான தன்னை மற்றொரு பொய் வழக்கில் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

உயர் நீதிமன்றத்தையும், சிறப்பு நீதிமன்றத்தையும் தவறாக பயன்படுத்திய பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உள்துறை செயலாளருக்கும், டிஜிபிக்கும் மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், தன் புகாரின் அடிப்படையில் பொன் மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன் மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஜூலை மாதம் உத்தரவிட்டார். மேலும், டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் டிஐஜி லவ்லி காட்டியார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2 பேர் ஒருவருக்கு ஒருவர் எதிராக குற்றம் சாட்டியுள்ளனர். இதில், உண்மை எது? பொய் எது? என தெரியவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி சிபிஐ விரிவாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா இருவரில் யார் குற்றவாளிகள் என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பொன் மாணிக்கவேல் மற்றும் காதர் பாட்ஷா சுப்புராஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. அதோடு வழக்கில் தொடர்புடைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரையும் விசாரணை செய்ய உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் ஜெர்மனி அரசிடம் ஒப்படைக்கப்படுகிறாரா?

Last Updated : Nov 6, 2022, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.