ETV Bharat / state

அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் எடுத்துச்சென்ற வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு - Chennai ADMK office

அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பொருள்களை எடுத்துச்சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரை சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கில், போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Aug 11, 2022, 4:31 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது கட்சியின் ஒற்றைத்தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். இதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் அங்கு மிகப்பெரிய கலவரம் நடந்தது.

இதையடுத்து அதிமுக அலுவலகம் மூடப்பட்டது. அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டப்பொருள்களை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்றுவிட்டதால் குற்றச்சாட்டு இருந்தது.

இதுகுறித்து ராயப்பேட்டை காவல் துறையில் சி.வி. சண்முகம் சார்பில் திருட்டுப் புகார் அளிக்கபட்டது. புகார் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்தப் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் மனு தாக்கல் செய்தார்.

அதில், 'ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல் துறையும் செயல்படுகின்றனர். ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்னையாக கொண்டுவருகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று (ஆக. 11) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரியாஸ் முகமது ஆஜராகி புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார். இதையடுத்து, சிவி சண்முகம் கொடுத்தப்புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: "மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைப்பதை நிறுத்துங்கள்" - ராகுல்காந்தி காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.