இந்தியா முழுவதும் வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதில் மோசடி செய்வதாக சிபிஐயில் வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் மீது 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிண்டிகேட் வங்கி மண்டல அலுவலகத்தின் துணை பொது மேலாளர் ராமலிங்கம், சிபிஐயிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "சென்னை அண்ணா சாலையில் செயல்படும் சினாகோ நிறுவனம், அண்ணாசாலை கிளை சிண்டிகேட் வங்கி மூலமாக 30 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. மேலும், இந்நிறுவனம் பாலாஜி அசோசியேட், கற்பக விநாயகா போன்ற நிறுவனங்களுக்கு கடன் வாங்கித் தருவதில் சிண்டிகேட் வங்கி ஊழியர்களை பயன்படுத்தி உள்ளது. ஆகவே, சினாகோ நிறுவன இயக்குனர்கள் நான்கு பேர் மீதும், அண்ணாசாலை கிளை சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் ராஜேஷ் சிங், கெளரி சங்கர், சம்பத் குமார் ஆகிய மேலாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சினாகோ நிறுவன இயக்குனர்கள், சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நில மோசடி வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்!