ETV Bharat / state

குட்கா ஊழல் வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு அனுமதி கிடைக்கவில்லை என 11வது முறையாக கூறிய சிபிஐ! - CBI Police

லஞ்சம் பெற்றுக் கொண்டு தடை செய்யப்பட்ட குட்காவை தமிழகத்தில் விற்க அனுமதித்த வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ 11ஆவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு அனுமதி கிடைக்கவில்லை என 11வது முறையாக கூறிய சிபிஐ

author img

By

Published : Jul 17, 2023, 1:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா பொருட்களை விற்பனை கிடங்குகளில் வைக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யபட்ட குட்கா பொருள்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அப்போதைய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்துள்ளது குறிப்பிடபட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் பழனி, செந்தில் வேலவன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகளும், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்த நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீஸார், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு (2022) ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டதா என சிபிஐ காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். சிபிஐ தரப்பில், இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று காரணத்தை கூறி கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் இன்றைய விசாரணை வரை 11 முறை (டிசம்பர் 15, ஜனவரி 10, பிப்ரவரி 6,17, மார்ச் 20, ஏப்ரல் 18,25, மே 11, ஜூன் 3, 26) வழக்கு விசாரணை சிபிஐ தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.