ETV Bharat / state

போலி இ-பாஸ்: அரசு அலுவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

author img

By

Published : Jun 27, 2020, 11:58 AM IST

சென்னை: போலி இ-பாஸ் வழங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அரசு அலுவலர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

cbcid wants police custody for fake e-pass issue investigation

மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கில் வெளிமாநிலத்திலிருந்து தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களும், அவசரத் தேவைக்காக வெளியூர் செல்பவர்களும் தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்றுச் செல்ல இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்தியது.

இதில் நடைமுறையில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க ஒருங்கிணைந்த இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மக்கள் ஆன்லைன் வழியாக அனைத்து ஆவணங்களையும் சமர்பித்த பிறகு இ-பாஸ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் இ-பாஸ்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையில் இ-பாஸ் வழங்குவதற்கு என்று பணியமர்த்தப்பட்ட இரண்டு அலுவலர்கள் உள்ளிட்ட சிலர் சட்டவிரோதமாக இ-பாஸ்களை அளித்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து சென்னை மாநகராட்சியில் இ-பாஸ் வழங்கும் அலுவலரான வருவாய் ஆய்வாளர் குமரன், எம்கேபி நகரைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் உதயகுமார், அம்பத்தூரைச் சேர்ந்த ஓலா கார் ஓட்டுநர்களான தேவேந்திரன், வினோத்குமார் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய ஐந்து பேர் இரண்டு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இ-பாஸ் விண்ணப்பித்தாலும் உடனடியாக அனுமதி கிடைக்காமல் இருந்த சூழலைப் பயன்படுத்தி இ-பாஸ் வழங்க ஒப்புதல் அளிக்கும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குமரன், உதயகுமார் உள்ளிட்டோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேர்ந்து ஒரு இ-பாஸினை இரண்டாயிரம் ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குமரன் உள்ளிட்ட ஐந்து பேரும் நாள் ஒன்றுக்கு 100 போலி இ- பாஸ் விற்க இலக்கு நிர்ணயித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த முறைகேட்டில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இ-பாஸ்களை சட்டவிரோதமாக விநியோகம் செய்ததில் நாளொன்றுக்கே லட்சக் கணக்கான ரூபாய் வருவாய் ஆக பெற்றது தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு அரசு ஊழியர்கள் தவிர மாநிலம் முழுவதும் உள்ள இ-பாஸ் வழங்குவது தொடர்பாக அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக சிறையில் உள்ள குமரன், உதயகுமார் ஆகிய அரசு ஊழியர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர். இதில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

இதையும் படிங்க: 'கரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை'- ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.