ETV Bharat / state

தொழிலதிபரை கடத்தி சொத்து அபகரிப்பு: ஆந்திர தொழிலதிபர் கைது - CBCID police arrest malefactor in Businessman abduction case

தொழிலதிபரைக் கடத்தி சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் ஆந்திர தொழிலதிபரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தொழிலதிபர் கடத்தல் விவகாரம்
தொழிலதிபர் கடத்தல் விவகாரம்
author img

By

Published : Nov 27, 2021, 9:17 AM IST

Updated : Nov 27, 2021, 10:39 AM IST

சென்னை: அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ், அவரது குடும்பத்தினரைக் கடந்த 2019ஆம் ஆண்டு கடத்தி சொத்துகளை அபகரித்ததாகக் காவல் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் உள்பட 10 பேர் மீது புகார் அளித்தார்.

இந்தப் புகாரின்பேரில் காவல் துறை அலுவலர்களுக்கு சம்பந்தம் இருப்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட சிவகுமார், சரவணன், பாண்டியராஜன், கிரி, பாலா, ஷங்கர், கோடம்பாக்கம் ஸ்ரீ, வெங்கடேஷ், சீனிவாசராவ் உள்பட 10 பேர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கோடம்பாக்கம் ஸ்ரீ கைது

இதனையடுத்து தலைமறைவாக இருந்துவந்த கோடம்பாக்கம் ஸ்ரீ-யை சிபிசிஐடி காவல் துறையினர் ஜூலை 15ஆம் தேதி கைதுசெய்தனர். சென்னையில் காவல் துறையினரையும் ரவுடிகளையும் கூட்டு சேர்த்துவைத்துக்கொண்டு தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் முக்கியமாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டதின் அடிப்படையில் கோடம்பாக்கம் ஸ்ரீ கைதுசெய்யப்பட்டார்.

கடத்தலில் தொடர்புடைய காவல் அலுவலர்கள்

அதனைத் தொடர்ந்து இந்தக் கடத்தலில் தொடர்புடைய காவல் அலுவலர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில் தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல், சொத்துகள் அபகரித்த விவகாரத்தில் தொடர்புடைய ஆந்திர தொழில் அதிபர் வேங்கட சிவநாதகுமார் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கடத்தலுக்கு முக்கியக் காரணம்

விஜயவாடாவில் தலைமறைவாக இருந்த வேங்கட சிவநாதகுமாரை சிபிசிஐடி தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர் மீது ஆந்திராவில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கடத்தலுக்கு முக்கியக் காரணமாக வேங்கட சிவநாதகுமார் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், வேங்கட சிவநாதகுமார் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற தொழிலதிபரிடம் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். இதில் 10 கோடி ரூபாயை ரொக்கமாக வெங்கடேசனுக்கு வேங்கட சிவநாதகுமார் கொடுத்துள்ளார். ஐந்து கோடி ரூபாய்க்கு பல்வேறு புராஜெக்ட்கள் செய்துதருவதாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெங்கடேசன் தொழில் இழப்பு ஏற்பட்டு எந்தவித புராஜெக்ட்டும் செய்து கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் வேங்கட சிவநாதகுமார், வாங்கிய தனியார் ஐடி நிறுவனத்தை நடத்த முடியாமல் நஷ்டம் அடைந்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசனிடம் ஐடி நிறுவனத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும், தான் கொடுத்த 10 கோடி ரூபாயைத் திருப்பித்தருமாறு வேங்கட சிவநாதகுமார் கேட்டுள்ளார்.

ஏன் கடத்தல்? - வாக்குமூலம்

விற்பனை செய்த நிறுவனத்தை மீண்டும் வாங்கிக்கொள்ள முடியாது, பணத்தைத் திருப்பித் தர முடியாது என வெங்கடேசன் தெரிவித்ததை அடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்ற ரவுடி கும்பல் தலைவன், அவரது மகன் தருண் பிரகாஷ் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து, வேங்கட சிவநாதகுமார் பணத்தை வசூல்செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் கடத்தல் விவகாரம்
தொழிலதிபர் கடத்தல் விவகாரம்

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் ஸ்ரீ உதவியோடு, காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஆறு காவலர்கள் உடன் இணைந்து தொழிலதிபர் ராஜேஷை கடத்தியதாக வேங்கட சிவநாதகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறிப்பாக வெங்கடேசன் தனக்குத் தர வேண்டிய பணத்தை, ராஜேஷிடம் கொடுத்துள்ளார் என்ற அடிப்படையிலும், வெங்கடேசனின் பினாமியாக ராஜேஷ் இருப்பதாகவும் நினைத்து ராஜேஷ், அவரது குடும்பத்தைக் கடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

வசூல் செய்த வேங்கட சிவநாதகுமார்

குறிப்பாக ராஜேஷை கடத்த காரணம், வெங்கடேசனிடம் கடனாக்கப் பணத்தை வாங்கி ராஜேஷ் பிபிஓ நிறுவனம் நடத்திவந்ததுதான். அதன்பிறகு பல்வேறு பிபிஓ புராஜெக்ட்டுகள் விவகாரமாகக் கோடிக்கணக்கான ரூபாய் வெங்கடேசன், ராஜேஷுக்கு இடையே நடைபெற்றுள்ளது.

ஆனால், இதனைத் தவறாகப் புரிந்துகொண்ட வேங்கட சிவநாதகுமார், வெங்கடேசன் நிறுவனத்தை விற்று வாங்கிய பணத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார் என்ற அடிப்படையில், ராஜேஷை கடத்தி சொத்துகளை மிரட்டி வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ராஜேஷ் கடன் கொடுத்து உதவிய மூன்று பேரையும் கண்டுபிடித்து மிரட்டி, ராஜேஷ் கடனாகக் கொடுத்த பணத்தையும் வேங்கட சிவநாதகுமார் வசூல் செய்துள்ளார். சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும், அதில் நான்கு சொகுசு பங்களாக்கள், 30 லட்ச ரூபாயை மிரட்டி அபகரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு

அவ்வாறு அபகரித்த சொத்துகளை வேங்கட சிவநாதகுமார், ஸ்ரீனிவாச ராவ், தருண் பிரகாஷ், கோடம்பாக்கம் ஸ்ரீ, காவல் உதவி ஆணையர் சிவகுமார் உள்பட ஆறு காவலர்கள் பங்கிட்டுக் கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் முக்கியமாகக் கருதப்படும் வேங்கட சிவநாதகுமார் மீது ஆந்திராவிலும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோடம்பாக்கம் ஸ்ரீ
கோடம்பாக்கம் ஸ்ரீ

வழக்கில் நீதிமன்றம், தலைமைக் காவலர் ஜோசப், காவலர் ஜெயக்குமார் ஆகிய இருவருக்கு முன்பிணை வழங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தலைமறைவாக உள்ள சிவகுமார், சரவணன், பாண்டியராஜன், காவலர் கிரி உள்ளிட்டோரை ஆந்திராவில் தேடிவருவதாகவும் சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கும் தொடர்பு?

குறிப்பாகக் கைதுசெய்யப்பட்ட வேங்கட சிவநாதகுமார் தலைமறைவாக இருக்கும் சிவகுமார், சரவணன் உள்பட ஆறு பேருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை: சிசிடிவி வெளியீடு

Last Updated : Nov 27, 2021, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.