ETV Bharat / state

இனி வரும் நாட்களில் எச்சரிக்கை மிக அவசியம் -ஆர்.பி.உதயகுமார்

சென்னை: ஊரடங்கின் 8ஆவது நாளில் நாம் இருக்கிறோம். இன்னும் வரக்கூடிய நாள்களில் எச்சரிக்கை மிக அவசியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

udayakumar
udayakumar
author img

By

Published : Apr 2, 2020, 7:45 AM IST

கரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவது தொடர்பாக மாநில பேரிடர் மீட்புக் குழுவினருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

பின்னர் சென்னை எழிழகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் 32 ஆயியிரத்து 221 பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 88 ஆயிரத்து 700 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாநில பேரிடர் மீட்பு படையினர் 953 பேரும் முதல்நிலை மீட்புக் குழுவினர் சுமார் 44 ஆயிரம் பேரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்து 131 பேரில் 711 பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். மற்றவர்கள் டெல்லி போன்ற மற்ற மாநிலங்களில் உள்ளனர். இந்த 711 பேரில் 617 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் போர்க்கால அடிப்படையில் கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது; "ஊரடங்கின் 8ஆவது நாளில் நாம் இருக்கிறோம். இன்னும் வரக்கூடிய நாள்களில் எச்சரிக்கை மிக அவசியம். இந்த விழிப்புணர்வு மிக அவசியமாக இருக்கிறது. நாளை பொதுமக்களின் குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அலுவலர்களுக்கும் காணொலி காட்சி மூலம் இதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் 32 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு ஏப்ரல் 11 முதல் 15 ஆம் தேதிக்குள்ளாக நேரில் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

99 விழுக்காடு மக்களுக்கு காரோனா குறித்த விழிப்புணர்வு உள்ளது. இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் சுற்றி வருகின்றனர். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேர் கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.